2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

திருமலையில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள பல கிராமங்கள்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 11 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் அடைமழையினாலும் மற்றும் கந்தளாய் குளம், ஏனைய சிறு குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் காட்டு வெள்ளம் பெருக்கெடுத்து வருவதாலும் கிண்ணியா பிரதேசத்தில் பல வீதிகள், மற்றும் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இப்பிரதேச தாழ்ந்த பகுதியிலுள்ள குடியிருப்பு மக்களை வள்ளங்கள் மூலம் பல பொது அமைப்புக்கள் மேட்டு நிலங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து வருகின்றனர்.

இவ்வெள்ளம் பெருக்கெடுத்திருப்பதால் கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் சமாவச்சதீவு, 'வரசந்தீவு, ஈச்சந்தீவு, கிரான், மஜீத் நகர், வட்டமடு, மணியரசங்குளம், குட்டித்தீவு, முனைச்சேனை, காக்காமுனை, நெடுந்தீவு, பட்டியனூர், மகமார், நடுஊற்று, ஆயிலியடி போன்ற பல கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வெள்ளப்பெருக்கு குட்டிக்கராச் பாலம், முனைச்சேனைப் பாலம், சல்லிக்களப்பு பாலம், குறிஞ்சாக்கேணி பாலம், பைசல் நகர் ஆலங்கேணி கிராமத்தை இணைக்கும் பாலம் ஆகியவற்றினூடாக ஊடறுத்துச் செல்கின்றது.

இதனால் சமாவச்சதீவு, 'வரசந்தீவு, சூரங்கல், ஆயிலியடி, தம்பலகமம், வான்எல, சல்லிக்களப்பு போன்ற பல்வேறு பகுதிகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .