2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சம்பூரில் நவரட்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் குடியேற அனுமதி

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 19 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.முராசில்

சம்பூர் பிரதேசத்தின் நவரட்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் மீள்குடியேற அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக மூதூர் பிரதேச இடம்பெயர்ந்தோர் நலன்புரி சங்கத்தின் தலைவர் குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவித்தார்.

கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட சம்பூர் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு குடியேறுவது என்பது தீராத பிரச்சினையாக இருந்து வருகின்றது. இந்த நிலையில், நவரட்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  மீண்டும் வந்து குடியேறலாம் என்று அரசு அனுமதித்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பூர் பிரதேசத்திலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்ந்த ஆயிரத்து 224 குடும்பங்கள் இன்னும் சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படாமல் தற்காலிக முகாம்களிலேயே இருந்துவருகின்றன. தற்போது நவரட்ணபுரம் கிராமத்தில் உள்ள தங்களின் சொந்தக் குடிமனைகளை 7 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்று பார்க்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அங்கு தமது குடியிருப்புகள் அழிந்து பற்றைக் காடுகள் மண்டியிருப்பதாகவும் அங்கு சென்று வந்தவர்கள் கூறியுள்ளனர்.

எனினும் நவரட்ணபுரம் கிராம மக்கள் பாதைகள், பள்ளிக்கூடம் மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்காக அண்டைக் கிராமங்களில் தங்கியிருக்க வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினர் என்றும் அவர் கூறினார்.

சம்பூர் பகுதியில் இந்திய உதவியில் அனல்மின் நிலையம் அமையவுள்ளதாகக் கூறியே அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக மீளக்குடியமர்த்தப்படாது இருப்பதாக அதிகாரிகள் கூறிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .