2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாம்பு போன்ற அரியவகை உயிரினம் கரைந்து விட்டது

Kogilavani   / 2014 மார்ச் 27 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா குட்டிகராச் ஆற்றில் புதன்கிழமை இரவு 8  மணியளவில் திடீரென திரண்ட  பாம்பு போன்ற அரியவகை உயிரினம் தற்போது கரைந்துள்ளன.

இந்த உயிரினத்தின் தோற்றமானது அடிக்கடி ஏற்படுவதால் ஏதோ இயற்கை அனர்த்தம் ஒன்று நிகழ்வதற்கான சமிக்ஞையாக இருக்கலாம் என்ற சில கிராம வாசிகளுடைய ஐதீக நம்பிக்கை பற்றி ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளரான கலாநிதி கே.எம்.இக்பால் அவர்களிடம் கருத்துக் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காலநிலை மாற்றமே இவ் வகை உயிரினங்கள் தோன்றி அழிவதற்கான காரணமாகும். கடல் பிரதேசத்தை கடலின் மேல் மட்டம், கீழ் மட்டம், அடி மட்டம் என வகைப்படுத்தலாம்.இந்த மூன்று பகுதிகளிலும் குளிரும் வெப்பமும் ஒரே அளவினதாக இருக்காது.

இவை மூன்றும் வௌ;வேறுபட்ட தன்மையைக் கொண்டிருக்கும். நிலத்தைவிடவும் கடலிலே அதிகளவு உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த நிலையில் திடீரென ஏற்படுகின்ற காலநிலை மாற்றத்தால் கடலின் சில பகுதிகள் குளிராலோ வெப்பத்தாலோ அசாதாரண நிலையை அடைகின்றது.

கடலில் அடியில் வாழ்கின்ற இவ்வாறான உயிரினங்கள் சில அங்கு வாழ முடியாது மேல் மட்டத்துக்கு படையெடுத்து வருகின்றன.

தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் கடலின் அடிமட்டத்தில்; வெப்பம் அசாதாரணமாக அதிகரித்ததால், மீன் உற்பத்தியில் பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டது. அந்த நாட்டின் ஏற்றுமதி வருமானம் வெகுவாகக் குறைந்தது.

இவ்; 'வெப்ப மாற்றத்தை எல்லினோ என்று கூறுவர்கள். வெப்பம் அதிகரித்ததனால் அடிமட்டத்தில் வாழ்ந்த உயிரினங்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவை அங்கு வாழ முடியாது வெளியே வருகின்றன' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .