2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஒன்றுபடுவோம் புனித தலத்தில்...

Menaka Mookandi   / 2011 ஜனவரி 21 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது புனித யாத்திரையினைத் தொடர்ந்தவண்ணம் உள்ளனர். எல்லா மதத்தினரும் ஒன்றாக சங்கமிக்கும் சிவனொளிபாத மலை நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். அதனாலேயே இந்த மலை ஒரு புனித தலமாக அனைத்து மத மக்களாலும் போற்றப்படுகின்றது.

இலங்கையிலுள்ள உயரமான மலைகளில் சிவனொளிபாத மலை மூன்றாவது இடத்தை வகிக்கின்றது. புத்தரின் பெருமை பேசும் 16 மலைகளுள் மிகவும் உயரமான மலையாகவும் இது போற்றப்படுகின்றது. இப்புனித தலம் கடல் மட்டத்திலிருந்து 2,243 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள.

இந்நிலையில் புத்தரின் அருளை வேண்டி சிங்களவர்களும் சிவ தரிசனத்தைப் போற்ற இந்துக்களும் இந்த புனித யாத்திரையை மேற்கொள்கின்ற அதேவேளை, கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தங்களது மதத்துடன் தொடர்புடைய காரணங்களைக் காட்டி இந்த யாத்திரையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Pix By :- Waruna Wanniarachchi


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .