2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கடலரிப்பு...

Super User   / 2011 நவம்பர் 26 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒலுவில் கடற்கரை பகுதியில் கடலரிப்பினால் கடந்த சில நாட்களில் மாத்திரம் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான காலநிலையின் காரணமாக ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பினால் கடலரிப்பு இப்பகுதியில் மிகவும் தீவிரமடைந்துள்ளது.

இதேவேளை, சுமார் 200 அடி அகலமான நிலப்பகுதி கடலரிப்பின் காரணமாக ஏற்கனவே கடலுக்குள் மூழ்கியுள்ளது. இந்த நிலையில், தற்போது இன்னும் அதிகமான நிலப்பரப்புக்கள் கடலுக்குள் வேகமாக மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். (ஹனீக் அஹமட்)


You May Also Like

  Comments - 0

  • pasha Sunday, 27 November 2011 06:02 AM

    திட்டமிடாமல், அரசியல் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட துறைமுகத்தினால் உண்டான விளைவு இது.

    Reply : 0       0

    avathaani Sunday, 27 November 2011 12:30 PM

    கடலரிப்பு, நாட்டின் கரையோர பகுதிகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. அரசின் நீண்ட கால திட்டமிடல் அவசியமாகும். துருவ பகுதியின் பனிக்கட்டி உருகுவதும், கடல் நீர் மட்ட உயர்வை ஏற்படுத்துவதும் கவனத்திற்குரியது. இது கடல் அரிப்புக்கு உந்துதலாகிறது.

    Reply : 0       0

    KALAM Sunday, 27 November 2011 06:25 PM

    இந்த திட்டத்திற்கு காரணம் தானைத் தளபதி பெரும் தலைவர் அல்லவா.

    Reply : 0       0

    சிறாஜ் Sunday, 27 November 2011 08:00 PM

    மடயர் சங்கத்தலைவர் எல்லாம் கொமண்ட் பண்ணினா இப்படித்தான் இருக்கும்.
    பெருந்தலைவர் ஒரு நல்ல நோக்கத்தில்தான் இதனை கொண்டுவந்தார். ஆனால் இந்த நிலமைக்கு அவர்தான் காரணம் என்று லூசி மாதரி பேசாமல் இப்ப என்ன செய்யலாம் என்பதுதான் எடுக்க வேண்டிய முடிவு.
    மேலே பாஷா என்னும் ஒரு மாவன்னா அரசியலை இங்கு கொண்டுவந்து என்னமோ உளம்புறார் அதுவும் இங்கு எடுபடாது... சரியான தீர்வு என்ன இப்ப....?

    Reply : 0       0

    ummpa Sunday, 27 November 2011 08:21 PM

    உலகத்தில் இது நடைபெறுகின்ற நிகழ்வுகள். இதற்கு அவர்தான் இவர்தான் காரணம் என்று சொல்லுவதில் அர்த்தமில்லை avanthani சொல்லுவதுதான் சரி. அவருக்கு உலக நடப்பு தெரிந்து இருக்கிறது. அதைவிட்டுவிட்டு உலக நிகழ்வுகளை நாளும் படிங்கோ !

    Reply : 0       0

    mim.mansoor Sunday, 27 November 2011 09:37 PM

    ஆராயாமல் கருத்துச் சொல்லுகின்ற, அல்லது தீர்ப்பு வழங்குகின்ற எவரையும் அறிவுலகம் ஒரு முட்டாளாகவே ஏற்றுக்கொள்ளும். இது தலைவர் மர்ஹூம் அஷ்ரப் மீது குற்றம் சுமத்துபவர்களுக்குப் சாலப் பொருந்தும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .