2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

குதிரைச் சவாரியில் வெள்ளி வென்றார் பவாட் மிர்ஸா

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா, பலெம்பாங்கில் இடம்பெற்றுவரும் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற தனிநபர் குதிரைச் சவாரிப் போட்டியில் இந்தியாவின் பவாட் மிர்ஸா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மூன்று நாட்களாக இடம்பெற்ற குறித்த போட்டியில், 26.4 புள்ளிகளைப் பெற்றே பவாட் மிர்ஸா வெள்ளிப் பதக்கத்தை வென்றார். குறித்த போட்டியில் 22.7 புள்ளிகளைப் பெற்ற ஜப்பானின் ஒய்வா யொஷியாக்கி தங்கப் பதக்கத்தை வென்றதுடன், 27.1 புள்ளிகளைப் பெற்ற சீனாவின் ஹுவா தையன் அலெக்ஸ் வெண்கலப் பதக்கத்தைப் வென்றிருந்தார்.

இதேவேளை, குறித்த போட்டியின் அணி நிகழ்விலும் பவாட் மிர்ஸா, ஜிதேந்தர் சிங், ஆகாஷ் மலிக், ராகேஷ் குமாரை உள்ளடக்கிய இந்திய அணி நேற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தது.

121.3 புள்ளிகளைப் பெற்றே இவர்கள் வெள்ளிப் பதக்கத்தை வென்ற நிலையில், 82.4 புள்ளிகளைப் பெற்றிருந்த ஜப்பான் அணி தங்கப் பதக்கத்தை வென்றதுடன், 126.7 புள்ளிகளைப் பெற்ற தாய்லாந்து அணி வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தது.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனிநபர் பூப்பந்தாட்ட காலிறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்ற இந்தியாவின் பி.வி சிந்துவும் சாய்னா நெஹ்வாலும் அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், இவர்கள் இருவரும் இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பு காணப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .