2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கேர்பருக்கு அதிர்ச்சித் தோல்வி

Editorial   / 2017 மே 29 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரின் முதலாவது சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

பிரெஞ்சுப் பகிரங்கத் தொடர், நேற்றே (28) ஆரம்பித்த நிலையில், தனது முதலாவது சுற்றுப் போட்டியில், உலகின் 40ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் எகத்திரினா மகரோவாவை எதிர்கொண்ட கேர்பர், 2-6, 2-6 என்ற நேர் செட்களில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

இதேவேளை, கடந்தாண்டு டிசெம்பரில், தனது வீட்டில் இடம்பெற்ற கொள்ளையொன்றில் கத்தியால் குத்தப்பட்ட பின்னர், இந்த பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரிலேயே பங்கேற்ற, செக் குடியரசின் பெற்றா குவிற்றோவா, வெற்றி மீள்வருகையைப் புரிந்துள்ளார்.

உலகின் 16ஆம் நிலை வீராங்கனையாக தற்போதுள்ள குவிற்றோவா, தனது முதலாவது சுற்றுப் போட்டியில், 6-3, 6-2 என்ற நேர் செட்களில், உலகின் 85ஆம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் ஜூலியா பஸிரப்பை வென்று, இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .