2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

செல்சியிலேயே இருப்பார் கொஸ்டா

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 20 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் முன்கள வீரர் டியகோ கொஸ்டா, எதிர்வரும் பருவகாலத்திலும் செல்சியிலேயே நீடிப்பார் எனத் தெரிவித்துள்ள செல்சியின் முகாமையாளர் அந்தோனியோ கொந்தே, தனது திட்டங்களில், கொஸ்டா, அடிப்படையான முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதாக கொந்தே தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் சர்வதேச அணியினதும் வீரரான கொஸ்டா, தனது முன்னைய கழகமான, ஸ்பெயின் லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டுக் திரும்பப் போவதாக தகவல்கள் வெளியான நிலையிலேயே கொந்தேயின் மேற்படி கருத்து வெளியாகியுள்ளது.

பிரான்ஸின் லீக் வண் அணியான மர்செய்யிலிருந்து 33 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு மிச்சி பட்ஷியியை செல்சி ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், அத்லெட்டிகோ மட்ரிட் அணிக்கு கொஸ்டா திரும்பப் போவதாக, அக்கழகத்தின் தலைவர் முன்னர் தெரிவித்திருந்ததோடு பின்னர் மறுத்திருந்தார்.

இந்நிலையிலேயே கருத்துத் தெரிவித்த கொந்தே, கொஸ்டா தங்களுடனேயே இருப்பார் என்றும், அவர் கடினமாக பயிற்சி செய்வதாகவும், அவர், தனது அணி வீரர்களுடனும் தன்னுடனும் மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .