2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள்: ரசிகர்களை கோருகிறார் டோனி

Super User   / 2011 மார்ச் 05 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிக்கெட் ரசிகர்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய அணியிடம் பங்களாதேஷ் படுதோல்வியடைந்தபின் பங்களாதேஷ் ரசிகர்களால் மேற்கிந்திய  அணி வீரர்களின் பஸ் மற்றும் பங்களாதேஷ் அணித்தலைவரின் வீடு ஆகியன கல்வீச்;சுக்கு உள்ளாகியமைமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே டோனி இவ்வாறு கூறியுள்ளார்.

'இது துரதிஷ்டமானது. ஆனால் இப்படித்தான் ரசிகர்கள் பிரதிபலிக்கிறார்கள். அந்த வீடுகளில் வசிக்கவில்லை. அவர்களின் குடும்பத்தினர்தான் வசிக்கின்றனர். அவர்கள் கிரிக்கெட் போட்டியில் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்' என டோனி தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியபோது டோனியின் வீடு ரசிகர்களின் தாக்குதலுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

'நாங்கள் போட்டியில் வென்ற பின்னர் நான் ரசிகர்களிடம் சென்று 2007 ஆம் ஆண்டு எனது வீட்டை தாக்கினீர்தானே என்று கூறி அவர்களை தாக்குவதில்லை' எனவும் டோனி கூறியுள்ளார்.

வெற்றி பெறும்போது அனைவரும் உங்களுடன் இருப்பார்கள். வீரர்கள் சிறப்பாக இல்லாத போது அவர்களை  ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும். அவர்கள்தான் உண்மையான ரசிகர்கள் என டோனி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி நாளை அயர்லாந்து அணியுடன் மோதவுள்ளது. அயர்லாந்து அணி ஏற்கெனவே இங்கிலாந்து  அணியை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான போட்டி சமநிலையில் முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .