2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு ஹஸிம் அம்லா தலைவர்

Super User   / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் இருபது20 ஓவர் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவராக ஹஸிம் அம்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்க அணியின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கான அணித்தலைவராக டி வில்லியர்ஸ் கடந்த ஜுன் மாதம்  நியமிக்கப்பட்டிருந்தார். அவரின் தலைமையில் தென்னாபிரிக்க அணி விளையாடும் முதல் சுற்றுப்போட்டியாக அவுஸ்திரேலிய அணியுடனான சுற்றுப்போட்டி அமையவிருந்தது.

எனினும் சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் ரோயல் சலெஞ்சர்ஸ் அணிக்காக விளையாடும் டி வில்லியர்ஸுக்கு பயிற்சியின் போது விரலில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டது. இதனால் அவர் 6 வாரகாலம் ஓய்வு பெற வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

28 வயதான ஹஸிம் அம்லா, தென்னாபிரிக்க தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற முதலாவது இந்திய வம்சாவளி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.   அவர் 3 இருபது ஓவர் போட்டிகளிலேயே விளையாடிய போதிலும் 49 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது ஒருநாள் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் ஹஸிம் அம்லா முதலிடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இருபது20 ஓவர் போட்டி ஒக்டோபர் 13 ஆம் திகதி ஜொஹான்னர்ஸ்பர்கில் ஆரம்பமாகவுள்ளது. அதன்பின் 3 ஒருநாள் போட்டிகளில் இவ்வணிகள் விளையாடவுள்ளன.

ஒருநாள் போட்டிகளுக்கான தென்னாபிரிக்க குழாம்:

ஹஸிம் அம்லா (தலைவர்), ஜொஹான் போத்தா, மார்க் பௌச்சர், ஜே.பி. டுமினி, பவ் பிளெசிஸ், இம்ரான் தாஹிர், ஜக் கலி,  டேவிட் மில்லர், மோர்ன் மோர்கல், வெய்ன் பார்னெல், ரொபின் பீற்றர்சன், கிறேம் ஸ்மித், டேல் ஸ்டெய்ன், லோன்வாபோ சொட்சோப்.


You May Also Like

  Comments - 0

  • ஓட்டமாவடி ஜெமீல் Tuesday, 04 October 2011 11:25 PM

    நல்வாழ்த்துக்கள் அம்லா ஷாப் & வாழ்க வளா்க.

    Reply : 0       0

    KLM Wednesday, 05 October 2011 12:47 AM

    அந்நாட்டில் சிறுபான்மையினருக்கும் இப்போது சமத்துவமான இடம் வழங்கப்படுகிறது போலும்.

    Reply : 0       0

    neethan Wednesday, 05 October 2011 01:07 AM

    இன வெறியின் உச்சமாக இருந்த நாட்டில், இந்திய வம்சாவளி அம்லா கேப்டன், இலங்கையில் அப்படி ஒன்று நிகழுமா?

    Reply : 0       0

    sidddeek Wednesday, 05 October 2011 08:09 PM

    mr. neethan இன்ஷா அல்லாஹ் நீங்கள் எதிர்பார்த்தது நிகழும்.

    Reply : 0       0

    srilankan frm kandy Wednesday, 05 October 2011 10:00 PM

    இலங்கையிலும் இந்த சமஉரிமை irunthirunthal முரளியையும் அணித்தலைவராய் பார்த்திருக்கலாம் .

    Reply : 0       0

    by A.Najith Saturday, 08 October 2011 04:59 PM

    மாஷா அல்லாஹ்.

    Reply : 0       0

    abdul Saturday, 08 October 2011 11:54 PM

    எல்லோரும் அறிய வேண்டிய ஒன்று, முரளிக்கு தலைமை கொடுக்கப்பட்ட போதிலும் அவர் அதை ஏற்கவில்லை, ஒரு விளையாட்டு அணிக்கு தலைமைப்பதவி கிடைப்பது அது அந்த வீரரரின் திறமையே தவிர, அந்த நாட்டின் இன பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை. அசாருதீன் தலைவரானார், ஆனால் இந்தியாவில் முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டுகொண்டே இருக்கிறார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .