2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பிளெட்சருக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும்: ராகுல் ட்ராவிட்

A.P.Mathan   / 2012 நவம்பர் 14 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் டங்கன் பிளெட்சருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார். அத்தோடு தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவி மேலும் பொறுப்புக்குரியதாக மாற்றப்பட வேண்டும் எனவும் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு உலகக்கிண்ணத்தைப் பெற்றுக் கொண்ட பயிற்றுவிப்பாளரான கரி கேர்ஸ்டனின் பின்னர் அவரின் சிபாரிசிலேயே இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராகப் பதவியேற்ற டங்கன் பிளெட்சர், இதுவரையில் இந்திய அணிக்கு தொடர்ச்சியான சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்திருக்கவில்லை.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் ட்ராவிட், ஒரு பயிற்றுவிப்பாளராக டங்கன் பிளெட்சர் அதிக வலிமைகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அணியின் வீரர்களோடு டங்கன் பிளெட்சர் சிறப்பான முறையில் இணைந்து செயற்படுவதாகத் தெரிவித்த அவர், எனினும் அவருக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் அல்லது அணித்தேர்வுகளை மேற்கொள்வதற்கான அதிகாரங்கள் என்பன டங்கன் பிளெட்சருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காணப்படுவதாக ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பயிற்றுவிப்பாளர்களாக இதற்கு முன்னர் பதவி வகித்த வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் அணியின் தேர்வு தொடர்பாகவும், உள்ளூர்ப் போட்டிகள் அதிகமானவற்றையும் பார்வையிட்டதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக ஜோன் ரைட், கிரெக் சப்பல் ஆகியோர் அணித்தேர்வு தொடர்பான சந்திப்புக்களில் பங்குபற்றியிருந்ததாகத் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .