2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக பங்களாதேஷ் அதிரடி

A.P.Mathan   / 2012 நவம்பர் 21 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், பங்களாதேஷ் அணிக்குமிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பித்து. இன்றைய நாள் முடிவில் பங்களாதேஷ் அணி பலமான நிலையில் காணப்படுகிறது.

குல்னாவில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி இன்றைய நாள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 365 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதலாவது விக்கெட்டை 5 ஓட்டங்களுக்கே இழந்த பங்களாதேஷ் அணி, இரண்டாவது விக்கெட்டுக்காக 59 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்து ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களையும், 8 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறியது.

எனினும் மஹமதுல்லா மற்றும் அறிமுக வீரர் அபுல் ஹசன் ஆகியோர் பிரிக்கப்படாத 172 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷ் அணிக்குப் பலத்தை வழங்கினர்.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக அறிமுக வீரர் ஆட்டமிழக்காத 100 ஓட்டங்களையும், மஹமதுல்லா ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களையும், நசீர் ஹொசைன் 52 ஓட்டங்களையும், முஷ்பிக்கூர் ரஹீம் 38 ஒட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மேற்கிற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ஃபிடல் எட்வேர்ட்ஸ் 5 விக்கெட்டுக்களையும், டெரன் சமி 2 விக்கெட்டுக்களையும், வீரசம்மி பேர்மாள் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .