2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாகிஸ்தான் தொடர் கடினமானதாக அமையும்: வட்மோர்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானுக்குச் சவாலானதாக அமையும் என பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் டேவ் வட்மோர் தெரிவித்துள்ளார். அத்தோடு இத்தொடர் தொடர்பாக மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடர் இலகுவானதொரு தொடராகக் காணப்படப் போவதில்லை எனத் தெரிவித்த டேவ் வட்மோர், குறிப்பாக நீண்ட காலங்களுக்குப் பின்பு இரு அயல்நாடுகளும் பங்குபற்றுவதால் மேலதிகமான ஆர்வம் இத்தொடர் தொடர்பாக ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆனால், இந்தத் தொடர் சிறப்பானது எனத் தெரிவித்த டேவ் வட்மோர், இரு அணிகளையும் சேர்ந்த வீரர்கள் மற்றைய அணியைச் சேர்ந்த வீரர்களை மதிக்கிறார்கள் எனவும், தொழில்ரீதியா கிரிக்கெட் வீரர்கள் என்பதால் அழுத்தங்கள் காணப்படும் என்பதை உணரமுடியும் எனவும் தெரிவித்தார். சிலர் தேவையற்று அழுத்தங்களை அதிகரிப்பதாகத் தெரிவித்த அவர், ஆனால் அது வழமையானது எனவும் தெரிவித்தார்.

இவ்வாறான தொடரொன்றில் இணைந்து செயற்படுவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்த டேவ் வட்மோர், இரு அணிகளுக்குமிடையிலான ஐ.சி.சி. போட்டிகளில் போதும், ஆசியக் கிண்ணப் போட்டிகளின் போதும் இணைந்து செயற்பட்டிருந்த போதிலும், இத்தொடரே இரு அணிகளுக்குமிடையிலான தொடரொன்றில் பங்குபற்றும் முதற்தடவையாக அமையும் எனத் தெரிவித்தார்.

இம்மாத இறுதியில் இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி 2 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகள், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .