2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உலக டுவென்டி டுவென்டி தரவரிசையில் முதலிடத்தில் இலங்கை

A.P.Mathan   / 2013 ஜூலை 25 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தரவரிசையில் இலங்கை அணி தொடர்ந்தும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள வருடாந்த தரப்படுத்தலிலேயே இலங்கை அணியின் முதலிடம் உறுதிப்பட்டுள்ளது.
 
ஓகஸ்ட் முதலாம் திகதி, 2010ஆம் ஆண்டிற்குப் பின்னர் இடம்பெற்ற போட்டிகளைக் கருத்திற் கொண்டு இந்தத் தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 
டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு அந்தஸ்து பெற்றுள்ள 16 நாடுகளில் கனடா, ஆப்கானிஸ்தான் ஆகிய 2 நாடுகளைத் தவிர ஏனைய 14 நாடுகளும் புதிய தரப்படுத்தலில் சேர்க்கப்பட்டுள்ளன.
 
கனடா, ஆப்கானிஸ்தான் ஆகிய 2 நாடுகளும் தரப்படுத்தலுக்குத் தேவையான 8 போட்டிகளில் விளையாடாத காரணத்தால் தரப்படுத்தலில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
 
இதில் முதலிடத்தில் காணப்படும் இலங்கை அணி, தற்போதைய உலக டுவென்டி டுவென்டி சம்பியன்களான மேற்கிந்தியத் தீவுகள் அணியை விட 7 புள்ளிகள் உயர்வாகக் காணப்படுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .