2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நினைவஞ்சலி…

Editorial   / 2018 ஜூன் 11 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருக்கோவில் ரூபஸ் பகுதியில், 1990 ஜூன் 11 ஆம் திகதியன்று படுகொலை செய்யப்பட்ட, 600 பொலிஸாருக்கு, 28 ஆம் ஆண்டு நினைவஞ்சலி, இன்று (11) நடத்தப்பட்டது.  

கிழக்கு மாகாண பொலிஸ் நிலையங்களிலிருந்து கடத்தப்பட்ட, மூவினங்களையும் சேர்ந்த 600 பொலிஸாரும், அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வைத்து, படுகொலை செய்யப்பட்டனர்.

உயிர்நீத்த பொலிஸாருக்கு ஆத்மசாந்தி வேண்டிய விசேட வழிபாடுகள், திருக்கோவில், ரூபஸ் குளத்துக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்வுகளில், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பிரதம அதிதியாக கலந்துகொண்டு, நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர், அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டதுடன், அஞ்சலியும் செலுத்தப்பட்டது.  அதனைத்தொடர்ந்து நினைவுத்தூபிக்கு, உறவினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

(படமும் தகவலும்: எஸ்.கார்த்திகேசு வி.சுகிர்தகுமார்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .