2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இங்கிலாந்து எதிர் இந்தியா: இ- 20 தொடர் இன்று ஆரம்பிக்கின்றது

Editorial   / 2018 ஜூலை 03 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடர், மன்செஸ்டரில் இலங்கை நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு ஆரம்பமாகபுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளுக்கான தரவரிசையில், இந்தியா இரண்டாமிடத்திலும் இங்கிலாந்து நான்காமிடத்திலிருந்தவாறும் இத்தொடரை ஆரம்பிக்கின்றன. அந்தவகையில், தற்போது முதலிடத்திலிருக்கும் பாகிஸ்தான், மூன்றாமிடத்திலிருக்கும் அவுஸ்திரேலியா, சிம்பாப்வே ஆகியவற்றுக்கிடையிலான இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரும் நடைபெற்று வருகையில் இந்தியாவும் இங்கிலாந்தும் தமதிடங்களை தக்கவைக்க இத்தொடரை வெல்ல வேண்டியதாகவுள்ளது. தோற்கும் அணி தரவரிசையில் கீழிறங்க வேண்டியேற்படும்.

இந்திய அணியில், ஷீகர் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோலி என முதல் மூன்று இடங்களும் நிச்சயிக்கப்பட்ட இடங்களாகக் காணப்படுவதோடு, லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் அண்மைய போட்டிகளில் பிரகாசித்துள்ள நிலையில், சுரேஷ் ரெய்னா, மனீஷ் பாண்டே ஆகியோர் தமதிடங்களை உறுதிப்படுத்துவதற்கு தொடர்ச்சியான பெறுபேறுகளைப் பெறவேண்டியுள்ளது.

மறுபக்கமாக இங்கிலாந்து அணியில், ஜொஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜொனி பெயார்ஸ்டோ, ஜேஸன் றோய் என அனைவரும் பிரகாசிக்கின்ற நிலையில், பென் ஸ்டோக்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பும்போது யார் வெளியே போவது என்ற மிகப்பெரிய சிக்கல் காணப்படுகின்றது. ஆக, இவர்கள் நான்கு பேரும் தொடர்ச்சியாக பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டியவர்களாகவேயுள்ளனர். ஏனெனில், ஒரு போட்டியில் சோபிக்காததன் காரணமாகவே, பென் ஸ்டோக்ஸ் அணிக்குத் திரும்பும்போது பிரதியீடு செய்யப்படும் துரதிர்ஷ்டவசமான நிலை காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .