Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 15 , பி.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியுடன், உலகின் ஐந்தாம் நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
நேற்று இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் மட்டியோ பெர்ரென்ட்டினியை எதிர்கொண்ட அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், 5-7, 5-7 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் அன்டரயா பஸோவை எதிர்கொண்ட உலகின் 10ஆம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், 6-1, 7-5 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் பெலாரஸின் விக்டோரியா அஸரெங்காவை எதிர்கொண்ட உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, 6-4, 1-6, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் அஜ்லா டொம்ல்ஜனோவிச்சை எதிர்கொண்ட உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஸ்லோவாக்கியாவின் விக்டோரியா குஸ்மோவாவை எதிர்கொண்ட உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டி, 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் பிரான்ஸின் அலிஸே கொர்னெட்டை எதிர்கொண்ட உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அர்யானா சபலெங்கா, 1-6, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
26 Apr 2024