2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தோல்வியுடன் லீக் 1 பட்டம் வென்றது PSG

Editorial   / 2018 மே 13 , பி.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற றெனிஸ் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தபோதும் நான்கு வாரங்களுக்கு முன்னரே லீக் 1 சம்பியன்களாக தம்மை உறுதிப்படுத்தியிருந்த பரிஸ் ஸா ஜெர்மைன், லீக் 1 பட்டத்தைப் பெற்றுக் கொண்டது.

இப்போட்டியின் ஆரம்பத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனின் அஞ்சல் டி மரியாவின் உதையொன்றை றெனிஸ் அணியின் கோல் காப்பாளர் தோமஸ் கூபக் தடுத்திருந்தோடு, அவரின் இன்னொரு உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது. இதன் பின்னர் பரிஸ் ஸா ஜெர்மைனின் தோமஸ் மெனுயிரிடமிருந்து வந்த பந்தை கிலியான் மப்பே தலையால் முட்டியபோதும் அது கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்தது.

இதைத் தொடர்ந்து, றெனிஸ் அணியின் ஜேம்ஸ் லிய சிலிக்கி கொடுத்த பந்தை அட்ரியன் ஹுனெள தலையால் முட்ட அது கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்தது. இதையடுத்து பரிஸ் ஸா ஜெர்மைனின் கிறிஸ்தோபர் என்குன்குவின் உதையை தோமஸ் கூபக் தடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து கிலியான் மப்பேயின் உதையொன்றும் கோல் கம்பத்துக்கு வெளியால் சென்ற நிலையில் முதற்பாதி கோலெதுவும் பெறப்படாமல் முடிவடைந்தது.

இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில், பரிஸ் ஸா ஜெர்மைனின் பெனால்டி பகுதிக்குள் வைத்து அவ்வணியின் தியாகோ மொட்டாவால் அட்ரியன் ஹுனெள விதிமுறைகளை மீறி கையாளப்பட்டார் என வழங்கப்பட்ட பெனால்டியை பெஞ்சமின் பெளரிகெயுட் கோலாக்க றெனிஸ் அணி முன்னிலை பெற்றது. பின்னர் 71ஆவது நிமிடத்தில் அட்ரியன் ஹுனெள பெற்ற கோலுடன் இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் றெனிஸ் வென்றது.

அந்தவகையில், இப்போட்டியுடன் 41 லீக் 1 போட்டிகளில் தமது மைதானத்தில் தோற்காதிருந்த பரிஸ் ஸா ஜெர்மைனின் சாதனை முடிவுக்கு வந்திருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .