2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நியூகாசிலிடம் தோற்றது யுனைட்டெட்

Editorial   / 2018 பெப்ரவரி 12 , பி.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று  நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூகாசில் யுனைட்டெட்டிடம் மன்செஸ்டர் யுனைட்டெட் தோல்வியடைந்ததுள்ளது.

இப்போட்டியின் 65ஆவது நிமிடத்தில் மற் றிச்சி பெற்ற கோலின் காரணமாகவே 1-0 என்ற கோல் கணக்கில், தற்போது இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 13ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ள நியூகாசில் யுனைட்டெட், இரண்டாமிடத்திலுள்ள மன்செஸ்டர் யுனைட்டெட்டை வென்றது.

இப்போட்டியில், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் ஜெஸி லிங்கார்ட், அன்டோனி மார்ஷியல், அஷ்லி யங், மைக்கல் கரிக் ஆகியோர் கோல் பெறும் வாய்ப்புகளை நியூகாசில் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் மார்ட்டின் டுப்ரவகா தடுத்திருந்தார்.

இதேவேளை, லிவர்பூல் 2-0 என்ற கோல் கணக்கில் செளதாம்டனை வென்றிருந்தது. லிவர்பூல் சார்பாக, றொபேர்ட்டோ பெர்மினோ, மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இப்போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில், 72 புள்ளிகளுடன் முதலிடத்தில் மன்செஸ்டர் சிற்றியுள்ளதுடன், 56 புள்ளிகளுடன் மன்செஸ்டர் யுனைட்டெட் இரண்டாமிடத்திலுள்ளதுடன், 54 புள்ளிகளுடன் லிவர்பூல் மூன்றாமிடத்திலுள்ளது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 52 புள்ளிகளுடன் நான்காமிடத்திலுள்ளது. இக்கழகங்களை விட ஒரு போட்டி குறைய விளையாடியுள்ள நடப்புச் சம்பியன்களான செல்சி, 50 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றது. ஆர்சனல், 45 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .