2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தேசங்களுக்கான லீக்: டென்மார்க்கிடம் தோற்றது இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில், இங்கிலாந்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற டென்மார்க்குடனான குழு பி போட்டியொன்றில் 0-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து தோல்வியடைந்தது. டென்மார்க் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஸ்டியன் எரிக்சன் பெற்றிருந்தார்.

இதேவேளை, இத்தாலியில் நடைபெற்ற இத்தாலி, நெதர்லாந்துக்கிடையேயான குழு ஏ போட்டியொன்று 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இத்தாலி சார்பாகப் பெறப்பட்ட கோலை லொரென்ஸோ பெல்லெகிரினி பெற்றதோடு, நெதர்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை டொனி வான் டீ பீக் பெற்றிருந்தார்.

இந்நிலையில், துருக்கியில் நடைபெற்ற துருக்கி, சேர்பியாவுக்கிடையிலான குழு ஜி போட்டியொன்றானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. துருக்கி சார்பாக, ஹகன் கல்ஹனொக்லு, ஒஸான் துஃபான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். சேர்பியா சார்பாக, சேர்ஜி மிலிங்கோவிச்-சவிச், அலெக்ஸான்டர் மிற்றோவிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற ஸ்கொட்லாந்துடனான குழு எஃப் போட்டியொன்றில் 0-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு தோல்வியடைந்தது. ஸ்கொட்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை றயான் பிறேஸர் பெற்றிருந்தார்.

இந்நிலையில், குரோஷியாவில் நடைபெற்ற குரோஷியாவுடனான குழு சி போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது. பிரான்ஸ் சார்பாக, அந்தோனி கிறீஸ்மன், கிலியான் மப்பே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். குரோஷியா சார்பாகப் பெறப்பட்ட கோலை நிக்கொலா விளாசிச் பெற்றிருந்தார்.

இதேவேளை, போர்த்துக்கல்லில் நடைபெற்ற சுவீடனுடனான குழு சி போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான போர்த்துக்கல் வென்றது. போர்த்துக்கல் சார்பாக, டியகோ ஜோட்டா இரண்டு கோல்களையும், பேர்னார்டோ சில்வா ஒரு கோலையும் பெற்றனர்.

இந்நிலையில், ஐஸ்லாந்தில் நடைபெற்ற ஐஸ்லாந்துடனான குழு பி போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வென்றது. பெல்ஜியம் சார்பாக, றொமெலு லுக்காக்கு இரண்டு கோல்களையும், பிர்கிர் மார் செவர்சொன் ஒரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, போலந்தில் நடைபெற்ற பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவியாவுடனான குழு ஏ போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் போலந்து வென்றது. போலந்து சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி இரண்டு கோல்களையும், கரோல் லினெட்டி ஒரு கோலையும் பெற்றனர்.

இந்நிலையில், பல்கேரியாவில் நடைபெற்ற பல்கேரியாவுடனான குழு எச் போட்டியொன்றில் 1-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் வென்றது. வேல்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோனி வில்லியம்ஸ் பெற்றிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .