2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ் 103 பாடசாலைகள் தெரிவு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 17 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்.

ஆயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில்  103 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என  மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றபோது, அவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், "இலங்கையில் 325 தேசிய பாடசாலைகள்; மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ளன. மிகுதியாகவுள்ள பத்தாயிரம் பாடசாலைகள் மாகாண சபையின் கீழ் உள்ளன.

கிராமிய மாணவர்களின் கணினி அறிவை ஊட்டுவதற்கு தற்போது உங்களுக்கு கணினி வசதிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இந்த வாய்ப்பை நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்' என்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .