2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காணாமல் போனோருக்கு 'இல்லாமைக்காக சான்றிதழ்கள்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

கடந்தகால யுத்தம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள்; காரணமாக காணாமல் போனோருக்காக 'இல்லாமைக்காக  சான்றிதழ்கள்'  வழங்குவது தொடர்பான நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதிவாளர் திணைக்களத்தின் கிழக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் கே.திருவருள் தெரிவித்தார்.

'இல்லாமைக்கான சான்றிதழ்கள்' வழங்வது தொடர்பான செயலமர்வு, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, 'பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளாலும் அதற்குப் பிந்திய நடவடிக்கைகளாலும் காணாமல் போனோருக்குச் சான்றிதழ்கள்; வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

2010ஆம் ஆண்டு 19ஆம் இலக்க இறப்புப்பதிவு செய்தல், (தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் தற்போது நடைமுறையிலுள்ளது) என்ற சட்டத்துக்கு அமைய 'இல்லாமைக்கான சான்றிதழ்கள்' வழங்கப்படவுள்ளன. காணாமல் போனதை உறுதிப்படுத்துவதற்குரிய சாட்சியங்கள் இன்மை, மரணம் என்று பதிவதற்கு உறவினர்கள் விரும்பாமை, பொதுவாக இறப்பு இடம்பெற்று 25 வருடங்களுக்குள் பதிவை மேற்கொள்ளுதல்  வேண்டும் போன்ற காரணங்களால் காணாமல் போனோருக்குச் சான்றிதழ்களை வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகின்றன.

எனNவு,  காணாமல் போனோருக்காகச் சான்றிதழ்கள் வழங்கும் சட்டத்தில் இது போன்ற சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 2016ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இறப்புகளின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்  நிலவிய மோதல்களின் விளைவாக அல்லது அதன் பின் விளைவாக அல்லது அரசியல் அமைதிக்குலைவு, குடியியல் குழப்பம், வலுக்கட்டாயமாகக் காணாமல் போதல்களில் அறிக்கை இடப்பட்டவர்கள், ஆயுதப்படையினர்,  பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு 'இல்லாமைக்கான சான்றிதழ்கள்' வழங்கப்படவுள்ளன. இச்சான்றிதழ்கள் இரண்டு வருடங்களுக்குச் செல்லுபடியாகும். அதற்கு மேலதிகமான காலமெனில்; கால நீடிப்பை மேலும் இரண்டு வருடங்களுக்கு மேற்கொள்ள முடியும்.

அதேநேரம், 'இல்லாமைக்கான சான்றிதழ்' பெற்றுக்கொள்ளப்பட்ட ஒருவருடைய மரணம் தொடர்பான சான்றுகள், ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் மரணப்பதிவை பெறவும்; ஏற்பாடு உள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையிலேயே,  'இல்லாமைக்கான சான்றிதழ்கள்' வழங்குவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது'  என்றார்.
இவ்வாறிருக்க, காணாமல் போனோர் இறப்புப்பதிவை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 3,348 பேர் பெற்றுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .