2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'நாடகமும் அரங்கியலும் பரீட்சைக்காக ஒன்பதாயிரம் பேர் தோற்றவுள்ளனர்'

Niroshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் நாடகமும் அரங்கியலும் பரீட்சைக்காக தமிழ் டமொழி மூலம் ஒன்பதாயிரம் மாணவர்கள் தோற்றவுள்ளதாக பேராசிரியர் சி.மௌனகுரு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்பட்டுவரும் நாடக பயிற்சி முகாமின் நான்காம் கட்டம் நிறைவு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆனைப்பந்தி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்வி திணைக்களத்தின் அழகியல் பிரிவுக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஜெயஸ்ரீபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மாணவர்கள் மத்தியில் திறன்களை வளர்க்கும் வகையில் இந்த நாடகப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த பயிற்சி முகாமில் ஆறு குழுக்களாக 100 மாணவர்கள் பயிற்சிப் பெற்று வருகின்றனர்.இப் பயிற்சி பட்டறையின் ஆரம்பத்தின்போது சாதாரண மாணவர்களாக கலந்துகொண்ட இவர்கள், தற்போது ஆளுமை மிக்கவர்களாக மாறியுள்ளனர்.

இந்த பணியென்பது நாடகமும் அரங்கியலையும் வளர்ப்பது மாத்திரம் அல்ல.நாடகமும் அரங்கியலும் பாடநெறியாக வந்துள்ளது.கா.பொ.த.சாதாரண தரம் 9,000 மாணவர்கள் தமிழ் மொழியில் தோற்றுகின்றனர்.சிங்கள மொழியில் 29,000பேர் தோற்றுகின்றனர்.

முன்னாள் ஜனபதிபதி சந்திரிகா ஆட்சிக்காலத்தில் மாணவர்களின் ஆளுமையினை வளர்க்கவேண்டும் என்பதற்காக இந்த பாடநெறியை கட்டாயமாக்கினார்.இந்த பயிற்சி நெறியானது 40க்கும் மேற்பட்ட திறன்களை வளர்க்கின்றது.

எமது பாடசாலைகளில் நாடக்கல்வி அவ்வாறு கற்பிக்கப்படுவதில்லை.நாடகத்துறையில் இலகுவில் சித்திபெறலாம் எனவும் அவற்றினை ஒரு நகைச்சுவையான விடயமாகவுமே எமது பாடசாலைகளில் பார்க்கப்படுகின்றது.

நாடக ஆசிரியர்களுக்கு கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.அவ்வாறு அவர்கள் பயிற்சி பெறும்போதே அதன் மகிமை மாணவர்களுக்கு முழுமையாக கொண்டு செல்லப்படும்.அதற்கு மட்டக்களப்பு கல்வி வலயமும் இணங்கியுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .