2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ளோர்க்கு கோழிக்குஞ்சுகள்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 17 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( ஸரீபா )

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஜவாஹிர் சாலியின் 2010ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் வாழ்வாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு, மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நூற்றி முப்பது பேருக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றன.

காவத்தமுனை கிராம அபிவிருத்திச் சங்கம், மாஞ்சோலை கிராம அபிவிருத்திச் சங்கம், ரிதிதென்ன மாதர் அபிவிருத்திச் சங்கம், மாவடிச்சேனை மாதர் அபிவிருத்திச் சங்கம், வாழைச்சேனை மாதர் அபிவிருத்திச் சங்கம், பாலக்காடு கிராம அபிவிருத்திச் சங்கம், மீராவோடை மாதர் அபிவிருத்திச் சங்கம், பிறைந்துரைச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கம், ஜீவபுரம் மாதர் அபிவிருத்திச் சங்கங்களைச் சேர்ந்த நூற்றி முப்பது பேருக்கு இரண்டாயிரத்து நூறு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.

பிறைந்தரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய மண்டபத்தில்; பிறைந்துரைச்சேனை 206சி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் எம்.ஆப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் உதய ஜீவதாஸ், சபை உறுப்பினர் ஜே.அல்பத்தாஹ், ஓட்டமாவடி பிரதேசசபை உதவித் தவிசாளர் ஏ.எம்.நவ்பர், வாகரை பிரதேசசபை உறுப்பினர் எம்.ரீ.இஸ்மாயில், பாடசாலை அதிபர்களான எம்.எஸ்.சுபைதீன்,எம்.மஹ்ரூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .