2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மீள்குடியேற்ற பிரதியமைச்சரை வழிமறித்து நிவாரணம் வழங்க கோரிக்கை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 19 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த  மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை வழிமறித்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், தமக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குமாறு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை வெள்ளத்தினால் கடும் பாதிப்புக்குள்ளான கிழக்கு பல்கலைக்கழகத்தை பார்வையிட்டு விட்டு திரும்பிய மீள்குடியேற்ற பிரதியமைச்சரிடம்,  பல்கலைக்கழக வாயிலில் கூடிய பொதுமக்கள் தமக்கு நிவாரணம் வழங்குவதற்கான  உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரினர்.

செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொம்மாதுறை மேற்கு, வந்தாறுமூலை மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

வெள்ளத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எங்களின் நிலைமை  குறித்து எவரும் கவனத்தில் கொள்ளவில்லையெனவும் பிரதியமைச்சரிடம், பொதுமக்கள் தெரிவித்தனர். இப்பகுதிகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதாக தெரிவித்த அம்மக்கள், தாம் விவசாயத் தொழிலையே நம்பியுள்ளதாகவும் எனினும்,  இதுவரை தமக்கு உணவு கூட கிடைக்காத நிலைமை காணப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

இதற்கு பதிலளித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், நிவாரணப் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழிசெய்வதாகவும் உறுதியளித்தார்.  அத்துடன், செங்கலடி பிரதேச செயலாளருடன் தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறும் விநாயகமூர்த்தி முரளிதரன் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .