2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பல்கலைக்கழகத்தை தொலைபேசி மூலம் விரட்டும் காலம்போய்விட்டது:முரளிதரன்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 25 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

யுத்தத்தினால் கடும் பாதிப்புக்குள்ளான யாழ் பல்கலைக்கழகம் துரித அபிவிருத்தி அடைந்துள்ள நிலையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள சிலர் யுத்தத்தை பயன்படுத்தி தங்களை புனரமைத்துள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றியுள்ள அவர், 'உலகின் எந்த போராட்ட வளர்ச்சியிலும் முக்கிய மைல்கல்லாக இந்த பல்கலைக்கழங்கள் காணப்பட்டன.

இலங்கையை எடுத்துக்கொண்டாலும் அந்த போராட்டங்களில் இந்த பல்கலைக்கழங்கள் எந்தளவு முக்கியத்துவம் பெற்றன என்பது அனைவருக்கும் தெரியும்.

அவ்வாறான ஒரு கட்டமைப்பை பேணிப் பாதுகாப்பது அனைவரது கடமையாகும். இன்று யுத்தத்தை காரணம் காட்டி எந்தவித வளர்ச்சியும் பல்கலைகழகத்தில் ஏற்படுத்தப்படவில்லை. அன்று நான் பார்த்த அதே பல்கலைகழகமே இன்றும் உள்ளது.எந்தவித பௌதீக வளர்ச்சியும் அங்கு ஏற்படுத்தப்படவில்லை.

யுத்தத்தில் வடகிழக்கில் பல்கலைகழகங்கள் பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டன. அந்த பாதிப்புகளில் இருந்து யாழ்பல்கலைக்கழகம் வெகு விரைவாக மீண்டெழுந்து இன்று சிறப்பான முறையில் பரிணமிக்கின்றது. ஆனால் கிழக்குப் பல்கலைக்கழகத்தை பொறுத்த வரையில் யுத்தத்தை காரணம் காட்டி அங்கிருந்த சிலர் தங்களை மட்டும் புனரமைத்துள்ளனர்.

பல்கலைக்கழக பேரவையினர் எடுக்கும் முடிவுகள் அமுல்படுத்தப்படும்போதே பல்கலைகழகத்தினை சிறந்தமுறையில் கொண்டு செல்லலாம். பல்கலைக்கழங்கள் அரசியல் நோக்கமில்லாமல் அதன் தலையீடுகள் இன்றி செயற்பட வேண்டும்.

அப்போதுதான் அதன் நோக்கம் நிறைவடையும்.
கடந்த கால யுத்தத்தை பயன்படுத்தி இன்று பல்கலைக்கழகத்தில் பல குழுக்கள் உருவாக்கம் பெற்று வருவதால் அது பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைக்கும் அதன் வளர்ச்சிக்கும் பாரிய பின்னடைவைக் கொண்டுவரும்.

கடந்த காலத்தைப்போன்று சிலர் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு பல்கலைக்கழகத்தை மிரட்ட எத்தனிக்கின்றனர். அவ்வாறானர்களுக்கு இடம்கொடுக்க வேண்டாம்.

அது ஒரு காலத்துடன் சென்றுவிட்டது. இன்று அந்த நிலைமையினை அவர்களால் ஏற்படுத்த முடியாது. அதற்கு நாங்கள் ஒருபோதும் இடம்கொடுக்கமாட்டோம்.

பல்கலைக்கழக நடவடிக்கைகள் என்றும் சுதந்திரமாகவும் கட்டுக்கோப்புடையனவாகவும் மாற்றம்பெற வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .