2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வைத்திய சேவையாளர்களுக்கு விசேட செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 16 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)

கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், இயன்மருத்துவர்கள் ஆகியோருக்கான விசேட செயலமர்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை முண்ணான் (முள்ளந்தண்டு) பாதிப்பு வலையமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  செயலமர்வில் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் கடமையாற்றும் 250 மருத்துவ சேவையாளர்கள் கலந்துகொண்டதாக எலும்பு முறிவு வைத்திய நிபுணர் வைத்தியர் தயாசிவம் கோபிசங்கர் தெரிவித்தார்.

விபத்தின் ஊடாக அல்லது வேறு நோய்கள் ஊடாக முண்ணான் பாதிக்கப்பட்டு பக்க விளைவுகளை அனுபவிக்கும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்தல், பராமரித்தல், மன உளைச்சலை நிலைப்படுத்துதல், இதனால் மனநோய் ஏற்படாமல் சிகிச்சை அளித்தல் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எலும்பு முறிவு வைத்திய நிபுணர் டாக்டர். நரேந்திர பின்ரோ, வாதநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர்.தனங்கல, எலும்பு முறிவு வைத்திய நிபுணர் டாக்டர்.ரீ.கோபிசங்கர், சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர்.ஜெயரூபன் ஆகியோர் இந்த செயலமர்வில் விளக்கமளித்தனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .