2024 மே 08, புதன்கிழமை

கிழக்கு பல்கலை மாணவர்கள் பரீட்சை பகிஸ்கரிப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 2010 - 2012 கல்வியாண்டுக்கான தமிழ் முஸ்லிம் சிங்கள மாணவர்கள் இன்று சனிக்கிழமையும் பரீட்சைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

தாம் பல்வேறு விடயங்களில் கிழக்குப்பல்கலைக் கழக நிருவாகத்தினால் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற பரீட்சையையும் மாணவர்கள் புறக்கணித்ததோடு கிழக்குப் பல்பலைக்கழகத்தின் முன்பாக உள்ள மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையோரமாக அமர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தமது கோரிக்கைகளுக்கு நிர்வாகம் செவிசாய்க்கும் வரை தாங்கள் பரீட்சையைப் புறக்கணிக்கப் போவதாகவும் தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

போராட்டம் நடத்தும் மாணவர்களால் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன, இதற்கும் மேலதிகமாக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமக்கு நிர்வாகம் வாக்குறுதியளித்தபடி தமது 50 வீத வரவை அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மேலும் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்துகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X