2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொள்ளைச் சந்தேகநபர்கள் கைது

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 30 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு - திருமலை வீதி, லயன்ஸ் குறுக்கு வீதியில் உள்ள வர்த்தகரான குணரெட்ணம் ஹரிதரன் (34 வயது) என்பவரை வாளால் வெட்டிவிட்டு வீட்டை சூறையாடிச்சென்ற கொள்ளைக் குழுவினர் வெலிக்கந்தை பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 8.15 மணியளவில், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கெல்மட், கறுப்புத் துணியணிந்த சுமார் ஏழு பேர் கொண்ட குழுவினர் வர்த்தகரையும் உதவியாளரையும் கடுமையாக தாக்கி கதிரையில் கட்டி வைத்து விட்டு அலுமாரிகளை உடைத்து நகைகள் மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டு வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தகவல் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

சகல பொலிஸ் நிலையங்களும், பொலிஸ் சோதனைச்சாவடிகளும் உசார் படுத்தப்பட்டிருந்த நிலையில் இவர்கள் தப்பிச்சென்ற வான் - வெலிக்கந்தை சோதனைச்சாவடியில் பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளை வானில் இருந்த 3 கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அவ் வானில் இருந்து சாரதி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து, ஆயுதங்களும் கொள்ளையிடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டு மட்டக்களப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக் கொள்ளையின் போது, வர்த்தகரின் வீட்டில் இருந்த சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், மடிக் கணினி உட்பட பெறுமதியான பல பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. கொள்ளைக்குப் பயன்படுத்திய வானையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், அதில் ஒருவர் சிங்களவர் ஆகும் எனத் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இக் கொள்ளைகளுடன் இவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த கொள்ளையுடன் மேலும் பலர் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், தொடர்புடைய அனைவரையும் கைதுசெய்யும் பணிகளையும் ஆரம்பித்துள்ளனர்.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .