2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

போரைதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ந்து காட்டு யானைகளின் தொல்லை

Super User   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

மட்டக்களப்பு, போரைதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ந்து காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்த வண்ணமே உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் பாலையடிவட்டை 38ஆம், 39ஆம் மற்றும் 40ஆம் கிராமங்களில் காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளன. அத்துடன் றாணமடு 14ஆம் கொலனி, 13ஆம் கொலனி ஆகியவற்றில் புகுந்த காட்டு யானைகள் ஊர்மக்களை விரட்டியதுடன் பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது.

கடந்த 20 வருடங்களக இருந்துவரும் இந்த பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டும் இதுவரை நிறைவேற்றப்படாமலிருப்பது தமக்கு மிகுந்த கவலையளிப்பதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

"காட்டுயானைகள் உள்வரும் எல்லையோரக் கிராமங்களை சுற்றி மின்சார வேலிகள் அமைத்துத் தருவது குறித்து பலமுறை அமைச்சர்களும் அரச உயர் அதிகாரிகளும் கூறியிருக்கிறார்கள். ஆனால் இதுவரை அவற்றுக்குரிய எதுவித முன் ஏற்பாடுகளும் நடைபெற்றதாகத் தெரியவில்லை" எனவும் அந்த மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

எனவே இந்த நிலைமை மேலும் நீடிக்குமானால் அந்தப்பகுதி மக்களின் அன்றாடச் செயற்பாடுகளும் வாழ்வாதாரமும் மேலும் பாதிப்படையும் என தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .