2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வடக்கு முஸ்லிம்கள் குறித்து கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன: மாவையிடம் கேள்வி

Suganthini Ratnam   / 2013 ஜூலை 22 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பாக தெளிவாக அறிவிக்க வேண்டுமென நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் குழுவொன்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை யாழ்ப்பானத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை சந்தித்துள்ளது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துல் றஹ்மான் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தினை ஆளப்போகின்ற கட்சியாக வரவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பாகவும் அங்குள்ள முஸ்லிம்களின் புனர்வாழ்வு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் முஸ்லிம்களின் காணி போன்றவைகள் தொடர்பாக தெளிவாக அறிவிக்க வேண்டுமென கோரியுள்ளோம்.

இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடுவதாகவும் அந்த சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கித்தருவதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்ததாக அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0

  • AJ Tuesday, 23 July 2013 07:35 AM

    இதே கேள்வியை நாங்களும் கேட்போம். கிழக்கில் தமிழர் தொடர்பில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? அங்கு தேவை இல்லை இங்கு உங்களுக்கு தமிழர்கள் தேவை...!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .