2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சமூக, கலாசார சீரழிவை அனுமதிக்க முடியாது: பிள்ளையான்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


'சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடைந்து வருவது போன்று இங்குள்ள மக்களின் வாழ்கைத் தரமும் வளர்ச்சியடைய வேண்டும். பிரதேச மக்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைய சுற்றுலாத்துறையை சமூகங்களிடையே கொண்டு செல்லப்பட வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டு சமூக, கலாசார சீரழிவையும் அனுமதிக்க முடியாது.இதில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்கிறோம்' என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

'கிழக்கு மாகாணத்தில் சுற்றூலாத்துறையை மேலும் அபிவிருத்தி செய்யவும் உள்ளுர் உற்பத்தியாளர்களின் விற்பனையை ஊக்குவிக்கவும் சித்திரை புத்தாண்டு வருடப்பிறப்பை சிறப்பிக்;கவுமாக பாரம்பரிய கலை கலாசார விளையாட்டு நிகழ்வுகளை எதிர்வரும் 18ஆம் திகதியன்று கிழக்கின் உல்லாச புரியான பாசிக்குடா கடற்கரையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு, பாசிக்குடா செந்தாரா சுற்றுலா விடுதியில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது,

 'கடந்த காலத்தில் சுற்றுலாத்துறையானது கிழக்கில் மிகவும் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கின் உதயம் வேலைத் திட்டத்தின் மூலம் சுற்றூலத்துறையை கிழக்கில் அபிவிருத்தி செய்தார்.

சுற்றுலாத்துறை இங்கு அபிவிருத்தி அடைந்து வருவது போன்று இங்குள்ள மக்களின் வாழ்கைத் தரமும் வளர்ச்சியடைய வேண்டும். பிரதேச மக்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைய சுற்றுலாத்துறையை சமுகங்களிடையே கொண்டு செல்லப்பட வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டு சமூக, கலாசார சீரழிவையும் அனுமதிக்க முடியாது.இதில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்கிறோம்.

சுற்றுலாத் துறையானது கிழக்கில் 2014இல் அதிக வருமானத்தை ஈட்டித்தந்துள்ளது. இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம். எனவே எமது பிரதேசத்தில் உள்ள பாரம்பரிய மிக்க பிரபல்யமான இடங்களை உல்லாசப் பயணிகள் சென்று பார்வையிடும் சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.

வருடம்தோறும் இந்நிகழ்வு கிழக்கில் இடம்பெற வேண்டும். இந்நிகழ்வுகளில் எமது மூவின மக்களுடன் வெளிநாட்டு உல்லாசப் பயனிகளும் பங்குபற்றுதல் வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.

கடற்கரையோர விளையாட்டுக்களான நீச்சல் படகோட்டம், கரைப்பந்து, கால்ப்பந்து போன்றனவும் மரதன் ஓட்டம், கிடுகு பின்னுதல், சாயம் முட்டி உடைத்தல், தலையனைச்சமர் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், பாரம்பரிய உணவு விற்பனை, கலாச்சாரப் பேரணியென பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

மேற்படி நிகழ்வுகள் யாவும் பாசிக்குடா கடற்கரையிலேயே இடம்பெறவுள்ளன. இந்நிகழ்விற்;கு கிழக்கில் வாழும் மூவின மக்களும் கலந்துகொள்வதற்கான அழைப்பினை கிழக்கு மாகாண சபை மற்றும் சுற்றுலாத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிகழ்வுகளில் உல்லாசப் பயணிகளும் கலந்துகொள்வார்கள். உள்ளுர் உற்பத்திகளை விற்பனை செய்யும் இடங்களும் அன்றைய தினம் இலவசமாக ஒதுக்கப்படும். இதற்க்கான வருமானவரி எதுவும் அறவிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூர இடங்களில் இருந்து வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் பிரதேச கலாசார உத்தியோகஸ்த்தர்களுடாக ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்றும் மேலதிக விபரம் மற்றும் தொடர்புகளுக்கு கிழக்கு மாகாணசபை சுற்றுலாத்துறை பணிப்பாளர் க.கிருஷான் தொலைபேசி இலக்கம். 065 - 3063747, 077 - 4217917 உடன் தொடர்பு கொள்ளும்படி தகவல் விடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .