2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக முறைப்பாடு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 30 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பகுதிகளில்  தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் வேட்பாளர்களின் உருவப்படங்களை கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை  தொடர்பில் பொதுமக்கள் சிலர் தமது அமைப்புக்கு முறைப்பாடு செய்துள்ளதாக பப்ரல் அமைப்பின் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களுக்கான இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஹரீஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

அத்துடன், இப்பிரதேசங்களில் வீடு, வீடாக பிரசாரத்துக்கு  செல்லும் வேட்பாளர்களின் ஆதராவாளர்கள், வீட்டு உரிமையாளர்களிடம் அனுமதி பெறாமல் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் மற்றும் ஸ்டிக்கர்களை வீட்டுச்சுவர்களில் ஒட்டுவதாகவும் சிலர்  முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தவிர, இப்பிரதேசங்களில் பாரிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

தேர்தல் சட்டங்களை மீறும் நடவடிக்கைகள், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பப்ரல் அமைப்பு அவதானித்து வருவதாகவும் இந்த அவதானிப்புகளை மேற்கொள்வதற்காக பப்ரல் அமைப்பு உத்தியோகஸ்தர்களை நியமித்துள்ளதாகவும் அவர்  கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .