2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

36 விவசாயிகளுக்கு சின்ன வெங்காய விதை விநியோகம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


வேர்ள்ட் விஷன்  கிரான் பிராந்திய பங்காளர் நிறுவனத்தால், சின்ன வெங்காய உற்பத்தி  தொடர்பான பயிற்சியில் கலந்து கொண்ட சிறந்த 36 விவசாயிகளுக்கு சின்ன வெங்காய விதை, தொற்று நீக்கி, மாட்டெரு ஆகியன வெள்ளிக்கிழமை (4) வழங்கிவைக்கப்பட்டன.

முகாமையாளர் எஸ். மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வேள்ட் விஷன்  கிரான் பிராந்திய நிறுவனத்தின் பொருளாதார அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் ஜே.ஆர். அகிலானந்தன் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.

வேர்ள்ட் விஷன் நிறுவனத்திற்கு முகம்தெரியாத கொடையாளிகள் வழங்கும் பணத்தின் மூலம் எமது கிரான் பிராந்தியத்தில் கல்வி, பொருளாதார, சுகாதார வேலைத் திட்டங்களைச் செய்து வருகின்றோம்.

சென்ற வருடம் வழங்கப்பட்ட வெங்காய உற்பத்தியில் கண்ட வெற்றியின் பயனாகவே இந்த ஆண்டும் இலவசமாக வெங்காய விதையும் மாட்டெருவும் கூட்டெருவும் இயற்கைக் கிருமிநாசினிகளும் விநியோகிக்கப்படுகின்றன.
அதனை சிறந்த முறையில் பயிரிட்டு அமோக விளைச்சலைப் பெற வேண்டுமெனவும், தற்போதுள்ள பயனாளிகளின் வெற்றியே இன்னும் அதிக பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கு ஏதுவாக அமையும் என்றார்.

மட்டக்களப்பு வடக்கு பகுதி விவசாய உதவிப் பணிப்பாளர் வி.லிங்கேஸ்வரராசா கிரான் கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர் எஸ். ரவீந்திரன், கிரான் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில்  உரையாற்றிய மட்டக்களப்பு வடக்கு பகுதி விவசாய உதவிப் பணிப்பாளர் வி.லிங்கேஸ்வரராசா எமது நாட்டு அரசினால் வெங்காயத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதனால் தற்போது நீங்கள் திறன்பட வெங்காயச் செய்கையை மேற்கொள்ளும் பட்சத்தில் அதற்கான பூரண பயனைப் பெற முடியும்.

மாட்டெரு, கூட்டெரு போன்றவற்றை அளவுக்கேற்ப கிரமமாக உபயோகிப்பதன் மூலம் வெங்காயச் செய்கையின் பயனை அதிகமாக பெற வாய்ப்புண்டு என்று தெரிவித்தார்.

கிரான் கிழக்கு கிராம சேவக உத்தியோகத்தர் எஸ். ரவீந்திரன் உரையாற்றும் போது மட்டக்களப்பு மாவட்டம் வறுமை நிலையில் முதல் இடத்தில் உள்ளது.

வறுமை எம்மைப் பீடித்துள்ள ஒரு நோய், இதனைப் போக்குகின்ற மருந்தாக எமது முயற்சியே இருக்க வேண்டும். வேள்ட் விஷன் நிறுவனம் எமது பிரதேச மக்களுக்கு மீன்பிடி உபகரணங்கள், வீட்டுத் தோட்டம், வெங்காயச் செய்கை, சுயதொழில் போன்ற பல உதவிகளைச் செய்து வந்துள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சியை பயனாளிகளே செய்ய வேண்டும். இதனைத் தவிர அரசாங்கமானது வறுமையைக் குறைத்து பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக 'திவிநெகும' எனும் திட்டத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

ஆனபோதிலும், பயனாளிகளின் முயற்சியின்மையும், உள்ளீடுகளைச் சரியான விதத்தில் பயன்படுத்தாத தன்மையுமே, வறுமை நிலை குறையாமல் நாம் அல்லல் படுவதற்குக் காரணமாகும் என்றார்.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அன்ரனி ரொபேர்ட் கூறியதாவது, அரசாங்கமோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ எவ்வளவு உதவிகள் செய்தாலும் பயனாளிகளின் முழுமையான பங்களிப்பு ,ருந்தால் மட்டுமே பூரண பயனைப் பெற முடியும்.

எமது பிரதேச மக்கள் அனைத்து உதவிகளும் தமது காலடியில் கிடைத்தும் அதனைப் பயன்படுத்தாதது கவலைக்குரிய விடயமாகும். அதனை முறைப்படி செய்து வந்தால் வருமானம் அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .