2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘அற்ப காரணங்களுக்காக விலகியவர்கள் தலைமைத்துவத்துக்கு தகுதியானவர்களா?’

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஜனவரி 07 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தமிழ் மக்களின் பிரச்சினைகளை கண்ணியமாகவும் நிதானமாகவும் அர்த்தபுஷ்டியுடன் எடுத்துச் செல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து உழைக்க முடியாமல், சிறிய சிறிய அற்ப காரணங்களுக்காக விலகிச் சென்றவர்கள், தமிழ் மக்களுக்கு எவ்வாறு தலைமைதாங்க முடியும்” என, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் கேள்வி எழுப்பினார்.

 

மட்டக்களப்பு, ஊரணியில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகத்தை, நேற்று (06) மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

'இந்த நாட்டில், தமிழ் மக்களின் மிகப் பெரிய அடையாளமாக இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேர்களான உள்ளூராட்சி மன்றங்களுக்கு, மிகச் சிறந்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.

'தமிழ் தேசிய கூட்டமைப்பு அபிவிருத்தி செய்வில்லை என சிலர் மேல்போக்காக கூறித் திரிகிறார்கள். ஆனால், கூட்டமைப்பு எவ்வாறான அபிவிருத்திகளைச் செய்துள்ளதென, மக்கள் அறிவர்.

'இந்த நாட்டிலே, தமிழ் மக்கள் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டுள்ளார்கள் என வெற்றிக்குரலெழுப்பி தென்னகம் மகிழ்ச்;சி கொண்டாடியபோது, இந்த நாட்டிலுள்ள தமிழர்கள், உரிமையோடு வாழத்தான் விரும்புகின்றார்கள் என்று குரலெழுப்பிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தை  வழங்குகின்றது.

'இதனடிப்படையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கின்ற அரசியல் திட்டத்தை, இந்த நாடு அங்கிகரித்தேயாக வேண்டும் என்கின்ற செய்தி சொல்லப்படுகின்ற சந்தர்ப்பத்தில், தமிழ் மக்களின் உறுதியான பிரதிநிதித்துவத்தை முன்னெடுத்துச் செல்கின்ற கூட்டமைப்பின் கோரிக்கையை, அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று, சர்வதேச சமூம் கூறுவதற்கு, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒரு களமாக உள்ளது.

'தமிழர்களை மூலதனமாகக் கொண்டுச் செயற்படும் எல்லாக் கட்சிகளும், எங்களுடன் வந்து சேருங்கள், செயற்படுங்கள் என அழைப்பு விடுக்கிறோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .