2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

30 பாடசாலைகள் மூடுவிழா காணும்

Kogilavani   / 2015 நவம்பர் 23 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

'கண்டியிலுள்ள 84 முஸ்லிம் பாடசாலைகளில் சுமார் 30 பாடசாலைகள் மூடுவிழாக்காணும் நிலையில் உள்ளன. ஆசிரியர்களும் பெற்றோர்களும் போதியளவு ஊக்கம் காண்பிக்காமையே இதற்கு காரணம்' என ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபையின் உறுப்பினர் செய்னுள் ஆப்தீன் லாபிர் தெரிவித்தார்.

'தானுண்டு தன் பணியுண்டு என்ற நிலையில் காலந்தள்ள முடியாது. இது தொடர்பில் சிந்திக்க வேண்டும். இளைஞர் மத்தியில் ஒழுக்கம், கட்டுப்பாடு ஏற்பட்டால் மட்டுமே நாம் எதிர்பார்த்த  இலக்கை அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.

கண்டி, மடவளை மதீனியன் மாஸ்டர்; நலன்புரி அமைப்பு ஒழுங்கு செய்த பாராட்டுவிழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நேற்று(22), கண்டியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஆசிரியர்களை மாணவர்;களும் மாணவர்களை ஆசிரியர்;களும் கௌரவிக்கும் நிலை குறைந்து விட்டது. கௌரவத்தைக் கொடுத்தே கௌரவத்தை வாங்கவேண்டும். அதேநேரம் மூத்தவர்;கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இளைய தலைமுறைக்கு வழிகாட்டுபவர்களாக இருக்க வேண்டும். எப்போது எம்மில் ஒழுக்கம், கட்டுப்பாடு என்பன ஏற்படுகிறதோ அப்போதுதான் நாம் எதிர்பார்ப்பது கிடைக்கும். ஒழுக்கமில்லாத எந்த ஒரு வெளியீட்டாலும் பயனில்லை. ஒழுக்கம் கெட்ட பிறகு வைத்தியர்கள் உருவாகியும் பயனில்லை. பொறியியலாளர்;கள் உருவாகியும் பயனில்லை' என்றார்.

'மாணவர்களைத் தண்டிப்பது மட்டும்தான் கட்டுப்பாடு என்று நினைக்க வேண்டாம்.   அன்பு செலுத்தியும் இன்னும் பல வழிமுறைகளைக் கையாண்டும் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும்' என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .