2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பம்பரகலையில் பூர்த்தி செய்யப்படாமலுள்ள வீடமைப்பு திட்டம் குறித்து கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

நுவரெலியா பம்பரகலையில் அமைந்துள்ள வீடமைப்பு தொகுதி 2008 ம் ஆண்டு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் உடைக்கப்பட்டு புதிய வீடுகள் அமைப்பதற்காக 23 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இது வரையில் வீடுகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளதால் இது தொடர்பில் நிலைமைகளை அறிந்து கொள்ள இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் சீ.பி.ரட்ணாயக்க, நுவரெலிய நாடாளுமன்ற உறுப்பினர்களான  வேலுசாமி இராதாகிருஸ்ணன் , திகாம்பரம் , மாநகர சபை உறுப்பினர் திஸ்ஸ செனவிரத்ன ஆகியோர் மக்களிடம் பிரச்சினைகளை கேட்டு அறிந்து கொள்வதையும் சம்பந்தப்பட்ட மக்கள் தமது நிலைப்பாடுகளை தெரிவிப்பதையும் படங்களில் காணலாம்.

இப் பிரச்சினை தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் சீ.பி.ரட்ணாயக்க தொலைபேசி ஊடாக அமைச்சர் விமல் வீரவன்ஸவுடன் தொடர்பு கொண்டு பேசியதை தொடர்ந்து மிக விரைவில் வீடமைப்பு திட்டத்தை பூக்த்தி செய்து சம்பந்தபட்டவர்களிடம் கையளிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .