2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன, மத அடிப்படையில் பாடசாலைகள் உருவாக்கப்பட்டமை பெரும் தவறாகும் : உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.

Super User   / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்) 

இன மற்றும் மத அடிப்படையில் பாடசாலைகள் உருவாக்கப்பட்டமை பெரும்  தவறாகும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறியுள்ளார்.

கண்டி, கெலிஓயா அஸ்ஸிராஜ் ஆண்கள் பாடசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்  இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,  'கடந்த காலங்களில் இன மற்றும் மத அடிப்படைகளில் பாடசாலைகள் உருவாக்கப்பட்டமை பெரும்  தவறாகும். இதனால் மாணவர்கள் மத்தியில் பல் கலாசாரங்களைப் புரிந்து கொள்ளவும் மதிக்கவும் கூடிய பண்பு அருகியுள்ளது.
  
சகல இன மாணவர்களும் ஒரே பாடசாலையில் கற்கக்கூடிய  நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் தமிழ் பாடசாலைகளில் சிங்கள மொழிப்பிரிவும் சிங்கள மொழி பாடசாலைகளில் தமிழ் மொழிப் பிரிவும் ஏற்படுத்தப்படுவது பொருத்தமாக அமையும்' என்றார்.

பாடசாலை அதிபர் பஸ்லி சுலைமான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மேலும் உரையாற்றுகையில்,

'தற்காலத்தை ஆட்சி செய்வது அறிவாகும். செல்வத்தையும் ஆட்சி செய்யும் ஆற்றலை அறிவு கொண்டுள்ளது. எனவே அறிவின்பால் மாணவர் சமூகம் அக்கறை கொள்ள வேண்டும்.

தற்காலத்தில் பெண்கல்வி உயர்நிலையிலுள்ளது. நமது நாட்டில் பெண்களின் உயர்கல்விப் பிரவேசம் 70 சதவீதமாக உள்ளது.

கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் பாடசாலைகளில் மாணவர் அனுமதி தொடர்பில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் கல்வி தொடர்பான சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியமாகும்' என்றார்.

இதில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எஸ். எம். மர்ஜான், மானெல் பண்டார, தெனுவர வலயக் கல்விப் பணிப்பாளர் வீரரட்ன, உதவிக் கல்விப் பணிப்பாளர் சீ. எம். மன்சூர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Monday, 25 October 2010 09:53 PM

    எல்லா மதத்தையும் கற்றுக்கொடுக்க வசதி இருக்குமா?
    ஒரு மதத்தையும் கற்றுக்கொடுக்காதிருக்கவா?
    சகல மதங்கள் என்ற போர்வையில் ஒரே மதத்தை போதிக்கும் தந்திரமா?
    சர்வமதக்கூட்டங்கள் கூட ஒரே மதத்தினரால் ஆக்கிரமிக்கப்படுவதை பார்க்கக்கூடியதாக இருக்கும். நிலையில் சிறுபான்மை என்பது கேலிகூத்தாக்கப்படலாம்
    ஏன் சில பாட சாலைகள் நலிகின்றன, சிறுபான்மை சலுகை பெறப்போய் இப்பாடசாலைகள் பிரபலமற்ற பாடசாலைகள் ஆயினவா, ஒரு மதத்தினர் நடத்தும் பாடசாலைகளில் மற்ற மதத்து பிள்ளைகள் இத்தனை விழுக்காடு இருக்க வேண்டும் என்று கொழும்பிலிருந்து

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .