2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

போஷாக்கு மட்டத்தில் இலங்கை இன்னும் முன்னேறவில்லை: பசில்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

இலங்கை தெற்காசியாவில் பல துறையில் அபிவிருத்தி அடைந்திருந்த போதும் போஷாக்கில் இன்னும் போதிய முன்னேற்றத்தை அடையவில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று காலை பேராதெனிய விவசாயத் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற பயிற்சிநெறியொன்றை ஆரம்பித்து வைத்தே அவர் இதனை தெரிவித்தார். பத்து இலட்சம் குடும்ப பொருளாதார திட்டத்தை அமுல் படுத்தும் கிராம மட்ட அரச ஊழியர்களை பயிற்றுவிப்பதற்கான உயர் அரச அதிகாரிகளுக்கு இப்பயிற்சி பட்டறை இடம்பெருகின்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, 'ஜனாதிபதி இந்நாட்டுக்கு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி அத்துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். வீதி எழுச்சித் திட்டத்தின் கீழ் பாதைகளை முன்ளேற்றியதுடன் கிராம எழுச்சி மூலம் கிராமங்கள் முன்னேற்றப்பட்டுள்ளன.

அந்தவகையில் வாழ்க்கை எழுச்சி மூலம் அனைவரது வாழ்க்கையிலும் எழுச்சியை உண்டுபண்ணும் வகையில் குடும்ப பொருளாதாரத் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் நாட்டில் பத்து இலட்சம் குடும்ப பொருளாதார அலகுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இலங்கை தெற்காசியாவில் பல துறையில் முன்னேற்றம் கண்டுள்ளது. எமது கல்வி, வருட வருமானம் போன்றவை முன்னேறியுள்ளன. இருந்த போதும் போஷாக்குத்துறை இன்னும் போதியளவு முன்னேறவில்லை. அத்துறையை முன்னேற்றம் அடையச் செய்ய இத்திட்டம் பயன்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டம், குடும்ப கைத்தொழில், மற்றும் கமநல திட்டம் என்ற மூன்று அம்சங்கள் மூன்வைக்கப்பட்டுள்ளன. இதன் நோக்கம் குறைந்த விலையில் பொருட்களை பெறுவது மட்டுமல்ல. போஷாக்குமிக்க பொருட்களை பெருவதற்கு, இரசாயன பசலையற்ற உணவு வகைகளை பெருக்குவற்கு இது கைகொடுக்கும்.

கிராம மட்டத்தில் இத்திட்டத்தினை அமுல் படுத்துவதற்கு கிராமத்தில் நான்கு அரச ஊழியர்களை பான்படுத்தவுள்ளோம். கிராம அதிகாரி, சமுர்த்தி உத்தியோகத்தர், விவசாய உத்தியோகத்தர், குடும்ப சுகாதார உத்தியொகத்தர். ஆகியோர் இதற்காக பயன்படுத்தப்படுவர்' என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .