2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இனங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கும் பொறுப்பு இன்றைய சமூகத்தின் பிரதான கடமையாகும்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

வடக்கிற்கும் தெற்கிக்கும் இடையில் பலம் வாய்ந்த பாலம் ஒன்றினை அமைத்து இனங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கும் பொறுப்பு இன்றைய சமூகத்தின் பிரதான கடமையாகும்; என்று வட மத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கனே தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை பூஜாப்பிட்டிய மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இலக்கிய விழாவில் பிரதான உரையை ஆற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய கருணாரத்ன திவுல்கனே:

மாணவ மாணவிகளை அறிவில் சிறந்தவர்களாக்குவதற்கு இலக்கியம் முக்கிய பங்கை வகிக்கின்றது. இலக்கியத்தை பரிசீலனை செய்யும் மாணவர்கள் மத்தியில் வாழ்க்கையின் சகிப்புத் தன்மை ஏற்படுகிறது. அவ்வாறு இல்லாதவர்கள் பல தரப்பட்ட இன்னல்களில் மாட்டிக்கொள்கின்றனர்.

அண்மையில் தலை நகரில் பாடசாலை ஒன்றில் ஒரு மாணவி தனது டைப்பட்டியை இறுக்கி உயிரை விட்டுள்ளார். மற்றுமொரு மாணவி காதல் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான நிலைமைகள் உருவாகுவதற்கு காரணம் சகிப்புத் தன்மை இல்லாததே ஆகும்.

ஒரு ஜனாதிபதியால், பிரதமரால் அல்லது ஆளுநரால் முடியாததை ஆசிரியரால் செய்யமுடியும். அதுதான் மாணவர்களை நல்வழியில் நடாத்துவது.

மாணவர்களுக்கு அறிவை மட்டும் கொடுத்தால் போதாது. அவர்களுக்கு அறிவு ஞானத்தையும் கொடுக்க வேண்டும். வாழ்க்கையின் பக்குவம் அறிவு ஞானத்தால் மட்டுமே உருவாகும் என்றும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .