2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மண்சரிவு அபாயம்; யுனிக்விவ் கிராமத்தை வெளியேற்றுமாறு அறிவுறுத்தல்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்சரிவு அபாயத்துக்கு இலக்காகியுள்ள நுவரெலியா, யுனிக்விவ் கிராமத்தைச் சேர்ந்த 50 வீடுகளையும் அங்கிருந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தேசிய கட்டிடக்கலை ஆய்வு மையத்தின் மண்சரிவு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற முறையில் மண்திட்டுக்களை வெட்டியமை, நீரோட்டத்தை தடை செய்யும் வகையில் கட்டிட நிர்மாணங்களை மேற்கொண்டமை காரணமாகவே குறித்த கிராமத்துக்கு மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனால் குறித்த கிராமம், எந்நேரத்திலும் மண்சரிவுக்கு உள்ளாகலாம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .