2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பேச்சுவார்த்தையின் பின்னர், சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படும்: தொண்டமான்

Sudharshini   / 2015 பெப்ரவரி 09 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ரஞ்சித் ராஜபக்ஷ   

 
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பேச்சுவார்த்தையின் பின்னர், சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.


கடந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 60 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கொட்டகலை ஸ்டொனிகிளிப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு கரப்பந்தாட்ட மைதானங்களும் ஹட்டன், செனன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானமும் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானினால் திங்கட்கிழமை(9) திறந்து வைக்கப்பட்டது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.


'புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும்; 100 நாட்கள் மேலதிகமாக அத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்தாலோசித்து வருகின்றனர்' என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.


இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம், தோட்ட இளைஞர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .