2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘குறைகளைத் திருத்தி தேர்தலை எதிர்கொள்வோம்’

Editorial   / 2018 மார்ச் 13 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ.சண்முகநாதன்   

குறைகளைத் திருத்தி, எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வோம் என்று, தமது கட்சியின் ஆதரவாளர்களுக்கு எடுத்துரைத்துள்ள மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான ப.திகாம்பரம், நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், தமக்கு நல்ல படிப்பினைத் தந்துள்ளதென்றும் தெரிவித்தார்.  

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், தொழிலாளர் தேசிய சங்கத்துக்குக் கிடைத்த வெற்றி மற்றும் பின்னடைவை ஆராயும் பொருட்டு, நோர்வூட் நகரில் நேற்று முன்தினம் (12), நடைபெற்றக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,   

“கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், எமக்குக் கிடைத்த வெற்றிகளைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அதேநேரம், எமக்கு ஏற்பட்டுள்ள தோல்விகளை, வெற்றியாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  

தேர்தலில் வென்றவர்கள் மகிழ்ச்சியடைவதும் தோற்றவர்கள் மனம் சோர்ந்து போவதும் சகஜமென்று கூறிய அவர், வெற்றி என்று வரும்போது, அதில் அனைவருக்கும் பங்குண்டு என்பதோடு, பின்னடைவு என்று வரும்போது, அதற்குத் தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.  

எதிர்வரும் தேர்தல்களில், தம்மை எவ்வாறு தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பெறுபேறுகள் தமக்குக் அறிவுறுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், தொழிலாளர் தேசிய சங்கத்தில், அராஜகம் எதுவும் கிடையாதென்றும், தமது கட்டமைப்பை விரிவுபடுத்தக் கூடிய வகையிலான புதிய கட்டமைப்பை, அடுத்த மாதத்திலிருந்து நடைமுறைப் படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.   

“உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். சிலர், வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்கள். எனினும், எமது கூட்டணி,   ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு, 1 இலட்சத்து 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது. இருந்தும், புதிய தேர்தல் முறையில் நாம் குறைவான அங்கத்தவர்களைப் பெற்றுள்ளோமே தவிர, வாக்குகளை இழக்கவில்லை” என்றும் பெருமிதம்கொண்டார்.   

“தொழிலாளர் தேசிய சங்கத்தின் அடுத்தகட்டத் தலைமைகள் உருவாக வேண்டுமென்பதில், நான் அக்கறைகாட்டி வருகின்றேன். அதேபோல், எனது அமைச்சின் ஊடாக ஒதுக்கப்படும் நிதி, பரவலாக்கப்பட்டு, சகல பிரதேசங்களுக்கும் சென்றடையவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .