2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தேர்தலில் வெற்றிபெற ‘போலிக் கதைகளை கட்டவிழ்க்கின்றனர்’

Kogilavani   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

“நுவரெலியா மாவட்டத்தில், மத்திய அரசாங்கத்தின் நிதியில் அமைக்கப்படுகின்ற பாடசாலைக் கட்டடங்களைக் கட்டுவதற்கு, மாகாணசபை தடையாகவுள்ளது” என்ற கூற்றானது, வரப்போகின்ற தேர்தலில் அரசியல் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்வதற்காகக் கட்டவிழ்த்துவிடப்படுகின்ற போலிக் கதை” என்று, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,  

“ஹட்டன் பொஸ்கோ கல்லூரியில் கட்டடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, இன்னும் பயன்படுத்தப்படாதுள்ளது. இது, பாடசாலை நிர்வாகத்துக்கும் பாடசாலை சூழலில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலய நிர்வாகத்துக்கும் இடையிலான பிரச்சினையே தவிர, நிதி ஒதுக்கிய அமைச்சுக்கும் மத்திய மாகாண சபைக்குமிடையிலான பிரச்சினையல்ல.   

“மத்திய மாகாணத்தில் அமைக்கப்படுகின்ற பல பாடசாலைக் கட்டடங்கள் மத்திய அரசாங்கத்தின் நிதியிலிருந்தே கட்டப்படுகின்றன. ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.  

“இந்தப் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளையெல்லாம், மாகாண சபை தடுத்து நிறுத்திக்கொண்டா இருக்கிறது? அல்லது நிர்மாண வேலைகளைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் மாகாண சபைக்குதான் இருக்கிறதா?   

“வழங்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கூட முழுமையாகப் பயன்படுத்த முடியாதுள்ள மாகாண சபைகள், மத்திய அரசாங்கத்தின் அமைச்சு ஒன்று நடைமுறைப்படுத்தும் நிர்மாண வேலைகளைத் தடுத்து நிறுத்துகிறது என்பது மிகப்பெரிய கேலிக்கூத்தாகும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .