2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தொண்டாவும் திகாவும் திக்கு முக்கு

Editorial   / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதிலும் கட்டுப்பணத்தைச் செலுத்துவதிலும் பிரதான கட்சிகள் தீவிரமாகக் களத்தில் குதித்துள்ளன.  

எனினும், மலையகக் கட்சிகள் சேர்ந்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்று உடனடியாகத் தீர்மானிக்க முடியாமல், கடந்த சில நாட்களாக திக்குமுக்காடிப் போயிருந்தன.  

எனினும், பிரதான கட்சிகளுடன் சேர்ந்து சில இடங்களிலும், சில இடங்களில் தனித்தும் போட்டியிடுவதென்று, மூடிய அறைக்குள் மந்திராலோசனை செய்துவந்தன என்றும் அறியமுடிகிறது. 

நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய இடங்களில் போட்டியிடுவது தொடர்பிலேயே, மலையகத்தின் பிரதான கட்சிகள் மந்திரா​லோசனை செய்துவருவதாக அறியமுடிகின்றது. அதற்கான காய் நகர்த்தலே தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.   

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழு ஒருபக்கம் ஆலோசிக்கிறது.  
இதேவேளை, அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, அமைச்சர் பி.திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமையில், கொழும்பில் கூடி​யே ஆராய்ந்து வருகின்றது.   

இதில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான கட்சியுடன் சில இடங்களில் இணைந்தும், சில இடங்களில் தனித்தும் போட்டியிடுவதற்கு, ஆலோசித்துள்ளதாக அறியமுடிகிறது.  

தமிழ் முற்போக்குக் கூட்டணி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியுடன் சில இடங்களில் இணைந்தும், சில இடங்களில் தனித்தும் போட்டியிட ஆலோசித்துள்ளன.  

எனினும், இன்று வரையிலும் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. அந்த முடிவுளை, மலையத்தின் இவ்விரு பிரதான கட்சிகளும், இவ்வாரம் அறிவிக்குமெனத் தகவல் வெளியாகியுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .