2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பலத்த காற்று: மின்சாரம் தடை

Editorial   / 2018 ஜூன் 09 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

மலையகத்தில் சீரற்ற வானிலை நிலவுகின்ற நிலையில், தொடர்ந்து பலத்த காற்று வீசுகிறது.

இதன்காரணமாக, பல வீடுகளின் கூரைத் தகடுகள் மற்றும் தகரங்கள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன.

அத்துடன், பலத்த காற்று வீசி வருவதால், பல இடங்களில் மரக்கிளைகள் மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், ஹட்டனில் பல பிரதேசங்களுக்கு இன்று (09) நள்ளிரவு முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

மேலும், ஒரு சில பிரதேசங்களுக்கு மின்சாரம் இன்று (09) அதிகாலை வேளையில் வழமைக்கு திரும்பிய போதிலும், ஏனைய சில பகுதிகளுக்கான மின்சாரம் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அடிக்கடி மழையுடன் பலத்த காற்று வீசி வருவததல் மண்சரிவு அபாயப்பகுதிகளில் வாழ்பவர்களும், மரங்களுக்கு அருகாமையில் வசிப்பவர்களும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .