2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மல்வானை அல் - முபாரக் தேசிய கல்லூரியின் நீண்ட நாள் குறைகள் நிவர்த்தி

Super User   / 2011 ஜூன் 16 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எச்.எம்.பௌஸான்)

மல்வானை அல் - முபாரக் தேசிய கல்லூரியின் நீண்ட நாள் குறையாக இருந்த 'மல்டி மீடியா புரொஜெக்டர்' மற்றும் தொலைநகல் (பக்ஸ்) போன்ற உபகரணங்களை பாடசாலையின் பழைய மாணவரான தொழிலதிபர் பௌசுல் ஜிப்ரி பாடசாலையின் பிரதி அதிபர் மொஹமட் புர்கானிடம் நேற்று புதன்கிழமை கையளித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கருத்தரங்கின் போதே அவர் இந்த பொருட்களை கையளித்தார்.

இதனையடுத்து, இப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தை சந்தித்த இவர் பாடசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்ததுடன் அவற்றை நேரில் சென்று பார்வையிட்டார்.

அத்துடன் பாடசாலை ஆசிரியர் விடுதியை முழுமையாக திருத்தி அமைத்து தருவதாகவும் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .