2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'எத்தியோப்பியா, பொஸ்னியா, தமிழ்நாடு என பட்டப்பெயர் சூட்டப்பட்ட சேரிகளில் மக்களை வைத்திருக்கவே ஐ.தே.க

Super User   / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ ஜயசேகர)

கொழும்பு சேரிப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு புதிய வசிப்பிடங்களை வழங்குவது அரசாங்கத்தின் விசேட கவனத்திற்குரிய விடயமாகும். எனவே 'வத்தைகள்' எனக் கூறப்படும் தோட்ட குடியிருப்புகளில் வாழ்வோர் இடவசதியுள்ள வீட்டுத் திட்டங்களில குடியமர்த்தப்படுவர் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இன்று கூறியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செய்தியாளர் மாநாட்டில் பேசிய நீர்ப்பாசன அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அத்துமீறிய குடியிருப்பாளர் உட்பட சகல சேரிவாழ்  மக்களுக்கும் கட்டம் கட்டமாக வீடுகள் வழங்கப்படும் எனக் கூறினார்.

இவ்வாறு நடப்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிடிக்கவில்லை. அவர்கள் எத்தியோப்பியா, பொஸ்னியா, தமிழ்நாடு என பட்டப்பெயர் சூட்டப்பட்ட சேரிகளில் இந்த மக்களை வைத்திருக்கவே விரும்புகின்றனர் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

இவ்வாறான பெயர்கள் இந்த மக்களை ஒதுக்கிவிட வசதியானதாக இவர்களுக்கு அமையும் என அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .