2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலவச சத்திர சிகிச்சை முகாம்.

Super User   / 2014 மார்ச் 25 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர், எம்.யூ.எம்.சனூன்


சவூதி அரேபியாவிலுள்ள அல்பஸர் சர்வதேச மன்றத்தின் அணுசரணையில் கட்டார் நாட்டின் அல் ஈத் மன்றத்தின் ஊடாக இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் (ஜம்மஜயதுஸ் ஸபாப்) ஏற்பாடு செய்த இலவச கண் சத்திர சிகிச்சை முகாம்  செவ்வாய்க்கிழமை (25) புத்தளம் குவைட் வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  ஜம்மியதுல் ஸபாப் நிறுவனம் புத்தளத்தில் செய்யும் எட்டாவது இலவச கண் சத்திர சிகிச்சை முகாம் இதுவாகும்.

சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் செலவாகும் இந்த கண்களில் வெள்ளைபடர்தல் மற்றும் ஏனைய நோய்கான சத்திர சிகிச்சை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையில் சகல பாகங்களிலிருந்தும் முஸ்லிம் தமிழ் சிங்கள இனங்களையும் சேர்ந்த  சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கும் இலவசமாக இந்த சத்திர சிகிச்சை இங்கு மேற்கொள்ளப்படவுள்ளது.  இந்த முகாமில் பாகிஸ்தான் நாட்டைச்  சேர்ந்த விஷேட கண் சத்திர சிகிச்சை நிபுணர்கள் பலர் கலந்து கொண்டு இந்த சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய நிகழ்வில் புத்தளம் நகர சபைத் தலைவர் கே. ஏ. பாயிஸ், புத்தளம் பிரதேச செயலாளர் எம். ஆர். எம். மலிக், புத்தளம் குவைட் வைத்தியசாலை நிருவாக சபையினர், அல்பஸர் சருவதேச நிறுவனத்தின் முகாமையாளர் பக்றுதீன் டகான், இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் திட்டப் பணிப்பாளர் ஸபர் சாலி, பிரதிப் பணிப்பாளர் தாஸிம் மௌலவி, முகாமைத்துவ பணிப்பாளர்  றஸீம் மௌலவி, புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர் எஸ். ஆர்.எம்.முஸம்மில், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அப்துல்லாஹ் மஃமூத் ஆலிம் உட்பட பௌத்த மதகுருமார்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

நாட்டின் பல பாகங்களிலிருந்து பஸ்கள், வேன்களில் ஏராளமான நோயாளர்கள் தற்போது குவைத் வைத்தியசாலையில் நிறைந்து காணப்படுகின்றனர். இந்த வைத்திய முகாம் வரும் 29ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .