2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘நிர்வாகத்தை ஐ.தே. கவிடம் ஒப்படைப்பதன் மூலமே பொதுமக்களுக்கு நன்மை கிட்டும்’

Editorial   / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார்

“எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பேருவளை நகர சபை, பிரதேச சபை இரண்டினரும் நிர்வாகத்தை ஐ.தே கட்சயிடம் ஒப்படைப்பதன் மூலமே மக்களுக்கு அதிக நன்மைகளை, நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமாக பெற்றுக்கொள்ள வாய்ப்புக் கிட்டும்” என, மேல் மாகணசபை உறுப்பினரும் பேருவளை ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான இப்திகார் ஜெமீல் தெரிவித்தார்.

பேருவளை, பயாகளை, மங்கொன ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற ஐ.தே.கட்சி கிளை உருப்பினர்களுடனான விசேட கலந்துரையாடலில் உரையாடும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பேருவளை நகர சபையையும், பிரதேச சபையையும். ஐ.தே.கட்சி நிச்சயமாகக் கைப்பற்றும். உள்ளூராட்சி தேர்தலுக்கு முகங்கொடுக்க நாம் தயராக வேண்டும்.

“கடந்த நிர்வாகத்தின் மூலம் மக்கள் எதிர்பார்த்த செயல்கள் நடக்கவில்லை. பதவிகளில் அமர்ந்துகொண்டு வீணே காலத்தைக் கடத்தியவர்களால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். கடந்த கால வரலாற்றுத் தவரை இனிவரும் தேர்தலில் பேருவளை மக்கள் செய்யமாட்டார்கள் என்பது உறுதியாகும்.

“பேருவளை நகர சபை, பேருவளை பிரதேச சபைக்கு ஐ.தே கட்சி சிறந்த வேட்பாளர்களை நிறுத்தி, மக்கள் ஆதரவுடன் அவர்களை வெற்றி பெறச் செய்து, நல்லாட்சியின் மூலம் உதவிகளைப் பெற்று பேருவளை மக்களுக்கு சிறப்பான சேவைகளை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.

“பேருவளை நகர சபை மற்றும் பிரதேச சபைப் பகுதி மக்களுக்கு நிறையப் பிரச்சினைகள் உள்ளன. இப்பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டியுள்ளது. உள்ளூராட்சி தேர்தளில் ஐ.தே. கட்சிக்கு பேருவளை பெறு வெற்றியை கொடுப்பதன் மூலம் அப்பகுதிகளை புரட்சிகரமாக அபிவிருத்தி செய்ய வாய்ப்புக் கிட்டும்” என்றார்.

இக்கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்ச்சித் தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு கிராமிய மட்டத்தில் மக்களின் பங்களிப்பபை பெறுவது பற்றியும் ஆராயப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .